Umpire Ian Gould stopped Chris Gayle to Bat in Bengaluru vs Sri Lanka
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், கிறிஸ் கெய்ல் களமிறங்காததால் ரசிகர்கள் அவரது அதிரடியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில், நேற்று இலங்கை- மேற்கிந்திய தீவு அணி மோதிய போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கிறிஸ் கெய்ல் பாதியில் வெளியேறினார். போட்டியின் விதிமுறைப்படி ஒரு வீரர் எவ்வளவு நேரம் களத்தில் இல்லையோ, அந்த நேரம் முடிந்த பிறகுதான் மீண்டும் களமிறங்க முடியும். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கின் போது கிறிஸ் தொடக்க வீரராக களமிறங்கவில்லை.
இந்நிலையில் ராம்தின் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, 12.5 வது ஓவரின்போது கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவரை நடுவர் இயான் கவுல்டு தடுத்து நிறுத்தினார். இன்னும் 11 நிமிடம் கழித்து அல்லது 2 விக்கெட் விழுந்த பிறகுதான் நீங்கள் பேட்டிங் செய்ய முடியும் என்றனர். இதனால் கெய்லை நடுவர் இயான் கவுல்டு உடைமாற்றும் அறையை நோக்கி இழுத்துச் சென்றார்.
ஆனால், கிறிஸ் கெய்ல் களமிறங்காமலே மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அவரது அதிரடியை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.