பாரீஸ்: நான் தீவிரவாதி இல்லை... என்னை கட்டி அணைப்பீர்களா? என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்த இஸ்லாமிய இளைஞரை கண்ணீருடன் கட்டியணைத்த பாரீஸ் மக்கள்.
hj

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு இஸ்லாமிய இளைஞர் தன் கண்களை கட்டியப்படி, 'நான் தீவிரவாதி இல்லை, என்னை கட்டி அணைப்பீர்களா?' என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.
இதை கண்ட பாரீஸ் மக்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இஸ்லாமிய இளைஞரை கட்டியணைத்தனர். இதில் பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியபடியே அந்த இளைஞரை கட்டியணைத்தனர். அதன்பின், அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர், ''நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான் யாரையும் கொன்றது இல்லை. எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களை கொன்றால் அவன் தீவிரவாதிதான், அதில் மாற்றமில்லை. ஆனால் ஒரு இஸ்லாமியர் அதை செய்யமாட்டார். அதற்கு எங்கள் மதம் தடைவித்துள்ளது" என்றார்.
Blindfolded Muslim man with sign “Do you trust me?” hugs hundreds in Paris
No comments:
Post a Comment